இராணுவ அதிகாரிக்கு எதிரான அமெரிக்காவின் தடை; கையை விரித்தார் அலி சப்ரி!
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதனை மோர்னிங்கிற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் கீத் நொயர் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மேஜர் பிரபாத் புலத்வத்தைக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மோர்னிங்கிற்கு இதனை கூறிள்ளார்.
சுயாதீனமான நடவடிக்கை
இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சுயாதீனமான நடவடிக்கை என தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கம் கரிசனைகளை வெளியிடும் ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான சுயாதீன வழிமுறைகளை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அலி சப்ரி, இது தொடர்பில் நாங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு நாங்கள் தொடர்ந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம் ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.