பின் வாங்கும் அமெரிக்கா; ஈரான் தொடர்பில் அதிரடி முடிவு
ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை, 30 நாட்களுக்குத் தளர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டு வரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
[
14 கோடி கொள்கலன் உலகச் சந்தைக்கு வரும்
இதனைச் சமாளிக்கும் விதமாக, கடலில் நிலுவையில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை, 30 நாட்களுக்குத் தளர்த்துவதாக டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தத் தற்காலிகத் தளர்வின் மூலம் சுமார் 14 கோடி கொள்கலன் (140 million barrels) எண்ணெய் உலகச் சந்தைக்கு வரும் என்றும், இதன் மூலம் எரிசக்தித் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஓரளவுக்குக் குறையும் என்றும் அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளதாக ரொய்ட்டரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த சில நாட்களிலேயே மசகு எண்ணெய் ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடையும் என அமெரிக்க எரிசக்தித் துறைத் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.