இலங்கைத் தொடர்பில் கவலை வெளியிட்ட அமெரிக்க தூதுவர்!
இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜலி சுங்(Julie Chung)தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியாக வாழும் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும், இலங்கையர்கள் எதிர்கொள்ளம் உண்மையான சவால்களில் இருந்து நாட்டை வழமைக்கு கொண்டுவர வேண்டும்.
மேலும் இதற்காக தீர்வை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.
அதனூடாக இலங்கையர்களுக்கு ஒரு நீண்டகால தீர்வு அவசியம் எனவும் அமெரிக்க தூதுவர் ஜலி சுங் (Julie Chung)குறிப்பிட்டார்.
Concerned by another State of Emergency. The voices of peaceful citizens need to be heard. And the very real challenges Sri Lankans are facing require long term solutions to set the country back on a path toward prosperity and opportunity for all. The SOE won’t help do that.
— Ambassador Julie Chung (@USAmbSL) May 7, 2022