திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் சீன குடா விமான நிலையத்தில் வந்திறங்கியது.
இலங்கையின் பேரிடர் நிவாரண உதவிகளை விரைவாக இலங்கை முழுவதும் வழங்கும் திட்டத்தின் கீழ் இவ் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளது.

நிவாரண பொருட்கள்
திருகோணமலை மாவட்டத்தில் டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கிண்ணியா, மூதூர், வெருகல் பகுதிகளின் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வீடு திரும்பிய 250 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் இன்றைய தினமே வழங்கி வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய உதவி திட்டம்,இங்கிலாந்து உதவித் திட்டம்,யுனெப்ஸ் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களே இவ்விமானத்தில் எடுத்து வரப்பட்டிருந்தது.இந்நிவாரண உதவிகளை அகம் மனிதாபிமான வள நிறுவனம் விருத்தி வலையமைப்புடன் இணைந்து உரிய இடங்களுக்கு வழங்கின.

மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், வெருகல் பிரதேச செயலாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி இச்சேவையை,வொக்கோட் நிறுவனம்,மக்கள் சேவை மன்றம் ஆகிய நிறுவனங்கள் நிவாரண உதவிகளை உரியவர்களுக்கு வழங்கின.
இதன் அடிப்படையில் கிண்ணியா பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றம் நிறுவனமும், மூதூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு வொக்கோட் நிறுவனமும்,வெருகல் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு அகம் நிறுவனமும் இன்றைய தினமே நிவாரணங்களை வழங்கி இருந்தன.
இந்நிகழ்வில் யுனெப்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் அகம் மனிதாபிமான வள நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.