இலங்கையர்களுக்கு சிஐடி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை ; மக்களே அவதானம்
நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் தொலைபேசி அல்லது இணையம் வாயிலாக நபர்களைத் தொடர்பு கொள்கின்றனர்.

விசாரணை
உங்கள் மீது ஒரு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறி மிரட்டும் அவர்கள், அந்தத் தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்ற அல்லது நிவாரணம் வழங்க பணம் தேவை என வலியுறுத்துகின்றனர்.
குற்ற விசாரணை என்ற போர்வையில் மக்களைப் பயமுறுத்தி பணத்தைப் பறிக்கிறார்கள். இவ்வாறான சைபர் மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 10,015 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 3,100 முறைப்பாடுகள் நேரடியாக இவ்வாறான சைபர் மோசடிகளுடன் (Cyber Scams) தொடர்புடையவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவரேனும் தொலைபேசி மூலம் பொலிஸ் என அடையாளப்படுத்தி பணம் கோரினால், உடனடியாக உங்கள் பகுதிக்கு அருகிலுள் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.