வவுனியா மாவட்ட அரச அதிகாரிகளுக்கு அவசர கோரிக்கை!
நாட்டின் தற்போதைய கொரோனா நிலமையை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டிய சூழல் எழுந்துள்ளது.
ஆகவே பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகள் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் பல மீள இயங்க ஆரம்பித்துள்ளது அவற்றை கட்டுப்படுத்துவதுடன். மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பொது இடங்களில் அசண்டையீனமாக நடந்துகொள்வதையும் காணமுடிகின்றது.
மக்கள் பெரும்பான்மையாக கூடும் இடங்களில் எழுமாற்றாக பி.சி. ஆர் பரிசோதனைகளை செய்வதுடன் அவற்றை அதிகரிக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது.
பொதுமக்கள் கொரோனா நிலமையை கருத்தில் எடுத்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள்.
முக்கியமான தேவைகள் தவிர வீட்டைவிட்டு வெளியேறாதிருங்கள்…
கொரோனாவின் கோரப்பிடியில் தலைநகரே திணறும் போது வடமாகாணம் எல்லாம் எம்மாத்திரம்.
அவதானமாக விழிப்புணர்வுடன் இருங்கள் என சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.