கணவனை இழந்து முன்று பிள்ளைகளுடன் வாழும் இளம் தாயார் படும் அவல நிலை(Video)
இன்றைய நவநாகரிக உலகில் பகட்டுக்காய் பல குடும்பங்கள் பணத்தின் அருமை தெரியாது தண்ணீராய் அதனை செலவழித்து கொண்டிருப்பதை கண்கூடாக காண்கின்றோம்.
வெளிநாட்டவர்களின் காசு தானே என பிள்ளைகளை ஊதாரித்தனமாக சுற்றவிட்டு அவர்கள் வழிமாறி சென்றுகொண்டிருக்கின்ற அவலநியையும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது.
ஒரு கட்டமைப்பு இல்லாததால் பிள்ளைகள் தடம்மாறி செல்வதுடன் அவர்களின் எதிர்கால வாழ்வும் கண்முன்னே அழிவதை நாம் கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கின்றோம்.
அதேவேளை இன்னொருபுறம் போரின் வடுக்கள் மாறாத நிலையில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாது பல குடும்பங்கள் இன்னும் நம் தாயகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
கணவனை இழந்த , கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் படும் கஸ்ரங்கள் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் வாழ்வும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.
அந்தவகையில் முல்லைத்தீவின் ஒட்டிசுட்டான் பகுதியில் வாழும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட இளம் பெண்ணின் கண்ணீர் கதையை இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி உங்கள் கண் முன் கொண்டுவந்துள்ளது.