வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்

Jaffna Northern Province of Sri Lanka School Children Teachers
By Vironika Feb 21, 2026 01:40 AM GMT
Report

வடக்குமாகாண ஆளுநர் ஊடாக வடக்குமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியவளப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழு அறையில் இன்று இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல் | Update Issued On Teacher Shortage

சீரற்ற ஆசிரியவளம்

வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மதம் மாறி திருமணம் செய்த பெண் ; இறுதியில் கர்ப்பிணி தங்கைக்கு அண்ணன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

மதம் மாறி திருமணம் செய்த பெண் ; இறுதியில் கர்ப்பிணி தங்கைக்கு அண்ணன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

யாழ்ப்பாணத்தில் 89சதவீத ஆசிரியர்கள் காணப்படுகின்ற போதும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 50சதவீத ஆசிரியர்கள், வவுனியா மாவட்டத்தில் 64சதவீத ஆசிரியர்களே உள்ளார்கள் என்பதை எடுத்துக்கூறியதுடன், இந்தப் புள்ளிவிபரம் வடமாகாணத்தில் சீரற்ற ஆசிரியர் வளப்பரவலாக்கத்தை வெளிக்காட்டுகிறது என்பதை சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை வடமாகாணத்தில் கர்நாடக சங்கீதத்திற்குரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளணி 476. தற்போதுள்ள ஆளணி 506. அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 132சதவீதமான கர்நாடகசங்கீத ஆசிரியர்களும், கிளிநொச்சி 92சதவீதமான ஆசிரியர்களும், மன்னார் 72 சதவீதமான ஆசிரியர்களும், வவுனியா 60சதவீத ஆசிரியர்களும முல்லைத்தீவு 85சத வீத ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து வெளியான தகவல்

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து வெளியான தகவல்

கர்நாடக சங்கீத பாடத்திற்கு வடமாகாணத்தில் 30 ஆசிரியர்கள் மிகையாக உள்ள போதும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 81 ஆசிரியர்கள் மிகையாக உள்ளதாகவும் ஆனால் வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள 6 கல்வி வலயங்களில் 46 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இது வன்னிமாவட்ட பிள்ளைகளுக்கு நேரும் அநீதி என்பதும் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இத்தகையசூழலில் வன்னியிலுள்ள எமது பிள்ளைகள் பாடத்திற்கு ஆசிரியர்கள் இன்றி கலைத்திறன் பெற வழியற்று இரும்நிலையில், யாழ்ப்பாணத்தில் 81 கர்நாடக சங்கீத ஆசிரியர்கள் மிகையாக உள்ளனர் என்பவற்றைச் சுட்டிக்காட்டி இந்த சமச்சீரற்ற வளப்பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட ஆளணியைக் கொண்டே நிறைவு செய்ய இயலும் என்பதையும் இதன்போது கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்க விடயத்தில் வடக்குமாகாண கல்வி அமைச்சிலேயே குறைப்பாடுகள் இருப்பதாக இதன்போது தெரிவித்தார்.

15 வருடங்களாக கணவரின் சாம்பலை சாப்பிடும் மனைவி ; சுவையால் மயங்கி பெண் செய்யும் செயல்

15 வருடங்களாக கணவரின் சாம்பலை சாப்பிடும் மனைவி ; சுவையால் மயங்கி பெண் செய்யும் செயல்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US