இலங்கையில் நாளொன்றுக்கு 200 - 300 பேர் வரை உயிரிழக்கலாம்!
இனியேனும் முறையாக செயற்படாது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முற்படாவிட்டால், நாளொன்றில் சுமார் 200 தொடக்கம் 300 வரையிலானோர் உயிரிழக்கும் நிலை ஏற்படும்.
அடுத்து வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்றில் நாளொன்றில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 150 ஆக அமையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
90 வீதம் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படகூடும் என்பதை தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஏற்பட கூடிய அந்த மரண எண்ணிக்கையை தடுக்க நாம் இன்னும் தாமதமாகக் கூடாதென அவர் மேலும் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 200 - 300 மரணங்கள்?
துரித மற்றும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டாலும், ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆகும்போது, கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 80 தொடக்கம் 90 வரையில் அமையும் என ஆகஸ்ட் முதலாம் திகதியே பேராசிரியர் சுனெத் அகம்பொடி எச்சரித்திருந்தார்.
எனவே மரணங்களை தடுப்பதற்கு உரிய பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்தல் , வீடுகளில் தங்க வைத்து சிகிச்சை அளித்தல் மற்றும் அவசர சேவை உள்ளடங்களாக சிறப்பு பொறிமுறையொன்றின் தேவை உள்ளது.
மறுப்புறம் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியது போன்று, இந்தியாவில் ஏற்பட்டது போன்று ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொற்றாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம். எனவே தொற்று பரவுவதை உடன் தடுக்கப்பட வேண்டும்.