நல்லிணக்கத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நேரில் கண்டேன்; மங்கள தொடர்பில் ஹர்சா உருக்கம்
நல்லிணக்கத்திற்கான மங்களசமரவீரவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நேரில் கண்டேன் என முன்னாள் அமைச்சர் மங்கள ரவீரவின் மறைவு தொடர்பில் ஹர்சா டி சில்வா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவின் மறைவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்சா டி சில்வா,
அத்துடன் வெளிவிவகார அமைச்சில் அவரின் கீழ் பணியாற்றியவேளை மங்கள சமரவீர யார் என்பதை அறிந்துகொண்டேன்.
என்ன ஒரு தொழில்சார் தன்மை மிக்க மனிதர், என்ன ஒரு அற்புதமான மனிதர்.
முற்றிலும் நேர்மையானவர் எப்போதும் உண்மை மற்றும் நீதிக்காக நின்றார். நல்லிணக்கத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நேரில் கண்டேன்.
இலங்கையின் இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனவும் ஹர்சா டி சில்வா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.