பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும்

Jaffna Ranil Wickremesinghe Sri Lanka University Grants Commission
By Kirushanthi Jan 07, 2024 05:07 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

  நாட்டின் விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த முயற்சிகளில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்காகப் பல்கலைக்கழக சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னணி பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ். ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும் | University Students To Join Sl Development

குறித்த கலந்துரையாடலின் போது நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்குப் பாரிய பங்களிப்பை வழங்கும் வகையில் வடக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான அரசின் வேலைத்திட்டம் குறித்து மாணவர்களுக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு மாணவர்களை ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும் | University Students To Join Sl Development

மேலும், மனித வளமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைகின்றது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவீன தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட உயர்கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கான அரசின் திட்டங்கள் குறித்து இதன்போது மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும் | University Students To Join Sl Development

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் விரைவான முன்னேற்றத்தின் அவசியத்தையும் விளக்கிய ஜனாதிபதி ஒரு நாடு என்ற ரீதியில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை வலுவான துறைமுகங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும் | University Students To Join Sl Development

தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும் | University Students To Join Sl Development

2025 ஆம் ஆண்டளவில் 5 வீத பொருளாதார வளர்ச்சியை அடைவதன் இலக்கையும் 2030 ஆம் ஆண்டளவில் படிப்படியாக அதனை 7 - 8 வீதமாக அதிகரிப்பதன் இலக்கு குறித்தும் விளக்கமளித்த ஜனாதிபதி, இலங்கை உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தை விரைவில் அடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும் | University Students To Join Sl Development

வளமான மற்றும் அபிவிருத்தியடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்திய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களும் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும் | University Students To Join Sl Development

அத்தோடு குறித்த கலந்துரையாடலின் போது மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைய வேண்டும் | University Students To Join Sl Development

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US