யாழில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கொடூர தாக்குதல் நடத்திய மர்மநபர்கள்!
Sri Lanka Police
Jaffna
Sri lanka Tamil News
By Shankar
யாழ்ப்பாணம் மாவட்டம் - திருநெல்வேலி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (29-07-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது அதிகாலை இரு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த 4 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமாக்கியுள்ளதுடன், தங்கியிருந்த மாணவர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US