பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள்! ஒருவர் அதிரடி கைது
பிரித்தானிய நாட்டில் நோட்டிங்ஹாம் நகரில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர்களில் இரண்டு பேர் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (13-06-2023) அதிகாலை நோட்டிங்ஹாம் நகரத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணியளவில் தகவலறிந்து இல்கேஸ்டன் வீதிக்கு சென்ற பொலிஸார் அங்கு இருவரின் சடலங்களையும், மெக்தலா வீதியில் ஒருவரின் சடலத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நகர மையத்தில் ஒரே இரவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கள் மாணவர்கள் இருவர் எதிர்பாராத விதமாகவும் உயிரிழந்ததை மிகுந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம்.
இந்தச் செய்தியால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆதரவை தெரிவித்துகொள்கின்றோம்.
“இது எங்கள் சமூகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம்..” என குறிப்பிடப்பட்டுள்ளது.