இளைஞனுடன் சென்ற பல்கலைக்கழக மாணவருக்கு நடந்த துயரம் ; அதிதவேகத்தால் பறிபோன உயிர்கள்
அத்துருகிரிய - கொட்டாவ வீதியில் உள்ள பழைய சந்திப்பு பகுதியில், அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவர் மற்றும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
உயிரிழந்த இருவரும் மேலும் சில மோட்டார் சைக்கிள் சாரதிகளுடன் இணைந்து, கொட்டாவையிலிருந்து அத்துருகிரிய நோக்கி அதிகாலை 2 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் படுகாயமடைந்த இருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.