இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு
அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் போதிய தகுதியுள்ள கல்விசார் பணியாளர்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரமும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலை
நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதை விட, தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.