பல்கலைக்கழக நிகழ்வில் ரஜினியின் பிரபல பாடலை பாடி அசத்திய ஜப்பானிய முக்கியஸ்தர்!
பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஐப்பானின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை பாடி அசத்திய காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறையால் நடத்தப்பட்ட GLOBIZZ'24 நிகழ்வில் ஜப்பானின் Mitusubishi Corporation Ltd இன் தொடர்பு முன்னாள் அதிகாரியான 77 வயதான திரு. குபோகி சான் என்பவர்ம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்களின் முன்னிலையில் 1995-ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தமிழில் வெளிந்த முத்து திரைப்படத்தின் பிரபலமான ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை பாடி அசத்தியுள்ளார்.