இலங்கைக்காக உலகநாடுகளிடம் மன்றாடும் யுனிசெப்!
இலங்கையில் கவனிக்கப்படவேண்டிய வேண்டிய 1.7 மில்லியன் சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க யுனிசெப் உலகநாடுகளிடம் உதவிகோரியுள்ளது.
இலங்கை சிறுவர்களின் போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் சுமார் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை திரட்டும் நோக்கில் யுனிசெப் நிறுவனம் குறித்த நிதியுதவியினை கோரியுள்ளது.
அதேசமயம் எதிர்வரும் 7 மாதங்களுக்குமான சிறுவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கையின் நிலவரப்படி 25.3 மில்லியன் என்ற தொகை போதுமானதாக இருக்கும் என நம்புவதகாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் இந் நெருக்கடி நிலைமையில் நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்ட குழந்தைகள் எதாவது ஒருவகையில் தேவையுடையவர்களாக மாறுவார்கள் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.