வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் கப்பம் கோரும் பாதாள உலக குழுக்கள்!
இலங்கையின் பாதாள உலக குழுக்கள் சில வெளிநாட்டுப் பிரஜைகளிடம் கப்பம் பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு கடற்பரப்பில் நீராடுவதற்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் கப்பம் பெற்றுக் கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என தென் பகுதிக்குப் பொறுப்பான பிதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கூடுதல் பணம் அறவீடு
வெளிநாட்டவர்களின் வாகனங்ளை தரித்து நிறுத்துவதற்கும் கப்பம் கோரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருட்கள் விற்பனை செய்யப்படும் போது வெளிநாட்டவர்களிடம் கூடுதல் பணம் அறவீடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செயற்படும் கும்பல்கள் மற்றும் தனி நபர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென் கரையோரப் பகுதியில் பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.