உக்ஷார்; பிப்ரவரி 13 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல்!
ஜோதிடத்தின் படி, சனியும் சூரியனும் தந்தை மகன் உறவைக் கொண்டுள்ள போதும் இவ்விருவரும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். அதே சமயம் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்த சனி பகவான்
இதில் சனி பகவான் ஜனவரி 17 ஆம் திகதி தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்தார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார்.
இதனால் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. சனியும், சூரியனும் ஒரே ராசியில் ஒன்றாக பயணிப்பதால், அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் மார்ச் மாதம் வரை இருக்கும். இதில் சில ராசிக்காரர்கள் நல்ல அமோகமான பலன்களையும், சிலர் அதிக பிரச்சனைகளையும் சந்திக்கலாம்.
சனி சூரிய சேர்க்கையால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிகள்
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய நினைத்தால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சொத்துக்களைப் பெறுவதில் தடைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்கும்.
இக்காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அதனால் சட்ட பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு நெருக்கமானவர் கூட உங்களுக்கு துரோகம் செய்யலாம்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
நிதியைப் பொறுத்தவரை, உங்கள் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இக்காலம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் அவ்வளவு பெரிய பிரச்சனை எதுவும் ஏற்படாதாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்சனையால் தொழில் வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இவ்விரண்டிலும் சமநிலையைப் பராமரிக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்குமாம். எனவே ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனக்குறைவாக இருக்காதீர்கள். சிறு பிரச்சனைகளையும் உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய செலவுகளை வைத்துவிடும்.
இக்காலத்தில் ஆணவத்தை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே பல பிரச்சனைகளை உருவாக்குமாம்.