உக்ரைன் மற்றும் ரஷ்ய மக்கள் குறித்து பேசிய புடின்
9வது நாளாக உக்ரைனை ரஷ்யா தாக்கி வருகிறது . ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.
மோதல்களில் பலர் இறந்தனர். இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக சமூகம் கண்டனம் தெரிவித்தது. உக்ரைனின் தலைநகரான கியேவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறுவதைத் தடுக்க உக்ரைன் பாதுகாப்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் நேற்று கூடியது.
அப்போது புடின் கூறுகையில்,
எங்களது சிறப்பு ராணுவ நடவடிக்கை (உக்ரைன் மீதான தாக்குதல்) சரியான நேரத்தில் மற்றும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டது. நாஜிகளைப் போன்றவர்களுடன் நாங்கள் போராடுகிறோம். ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் ஒரே மக்கள் என்ற எனது நம்பிக்கையை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். ' என தெரிவித்தார்.