என் கணவருடன் சேர்த்து வையுங்கள்; மோடியிடம் மன்றாடும் உக்ரேனிய பெண்
ரஷ்ய - உகரைன் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், இந்தியரை மணமுடித்த உக்ரேனிய பெண் ஒருவர் தன்னை இந்தியாவுக்கு அழைத்து வந்து தன் கணவருடன் சேர்த்து வைக்குமாறு பிரதமர் மோடியிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார் .
உக்ரைனை சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தன் மனைவியை உக்ரைனில் விட்டுச் சென்று டெல்லியில் உள்ளார்.
இதற்கிடையே, தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்த பெண்மணி, உக்ரைனின் அண்டை நாடான போலாந்து வார்சா நகரிலுள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கிருந்த கொண்டு அவர் இந்திய பிரதமர் மோடியிடம் தன்னையும் இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டு வந்து தன் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விஷயம் அகதிகள் முகாமில் இருக்கும் செய்தியாளர்கள் மூலம் தற்போது வெளிவந்திருக்கிறது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்திய அரசு, அங்கு தவித்து கொண்டிருக்கும் இந்தியாவின் மருமகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? என ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.