ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள்; ரஷ்ய படையினருக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
உயிர் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பை தருகின்றோம் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள் என உக்ரைன் அதிபர் ரஷ்ய படையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யப் படையினர் சரணடைய வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zhelensky) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யப் படையினர் ஆயுதங்களை கீழே போட்டால் அவர்களிற்கு உயிர்வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் 'உக்ரைன் மக்களின் சார்பில் நாங்கள் உங்களிற்கு உயிர்வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றோம்,நீங்கள் எங்கள் படையினரிடம் சரணடைந்தால் நாங்கள் மனிதர்களை எப்படி நடத்தவேண்டுமோ அப்படி கௌரவமாக நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் இராணுவத்தில் நீங்கள் கௌரவமாக நடத்தப்படவில்லை, உங்கள் இராணுவம் மக்களை கௌரவமாக நடத்தவில்லை - எது வேண்டுமென்பதை தெரிவு செய்யுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவம் படையினரையும் ஆயுதங்களையும் இழப்பதால் யுத்தம் பயங்கரமானதாக மாறியுள்ளது எனினும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.