உக்ரைன் போரால் உலக நாடுகளுக்கு பாரிய உணவுப்பஞ்சம் ஏற்படவுள்ளதா?
உக்ரைன் - ரஷ்யா போரானது கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகிறது.
இந்த போரில் ரஷ்யா உக்ரைன் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இந்த நிலையில் தற்போது குறித்த இந்த போரின் காரணமாக உலக நாடுகள் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தாங்கள் உதவ தயாராக உள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது,
உக்ரைன் போர் காரணமாக உலக சமூகம் எதிர்கொள்ளும் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை தீர்க்க உதவுவதாக அவர் கூறினார்.
மேலும். ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது. இந்தப் போரினால் இரு நாடுகளின் அடிப்படை வசதிகள், பொருளாதாரம் மட்டுமன்றி உணவுத் தேவையும் பாதிக்கப்பட்டது.
உலகின் பல பகுதிகளில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில், வரும் நாட்களில் உலக நாடுகள் சந்திக்கும் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை தீர்ப்பதில் கனடா முக்கிய பங்கு வகிக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.