ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - உக்ரைன் அறிவிப்பு!
போர் நிறுத்த, அமைதி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலை மூன்றாவது நாளாக தீவிரமாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் பெரும்பாலான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
இதேவேளை, உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி வருகின்றது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிழவி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் அதனையை ந்சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
போர் நிறுத்தம், அமைதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆலோசித்து வருகிறதுஎன கூறியுள்ளார்.