உக்ரைனில் நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: சீன மாணவருக்கு நேர்ந்த நிலை
உக்ரைன் மீது ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து போர் நடத்தி வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான பேர் இறந்திருக்கலாம் என அச்சப்படுகின்றது.
உக்ரைனில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட ரஷ்யப் படைகளால் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வென்பின் இது குறித்து கூறுகையில்,
உக்ரைனில் நேற்று சீன நாட்டவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தார். உக்ரைனில் உள்ள சீன தூதரகம் அவருடன் தொடர்பில் உள்ளது. தற்போது அவர் ஆபத்தான நிலையை கடந்து விட்டார்.
உக்ரைனில் இருக்கும் 2,500 சீன மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை சீரான முறையில் நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் உள்ளனர். அவர்களை அண்டை நாடுகள் வழியாக தாய்நாட்டு திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.