பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் முன் தோன்றிய புடின்! பாராட்டி பேசிய பலர்
உக்ரைனிடமிருந்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் 8-வது ஆண்டு விழாவையொட்டி, லுஸ்னிகி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது.
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புகள் 23 நாளாக தீவிர தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று (18-03-2022) நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கலந்து கொண்டார்.

உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் 8-வது ஆண்டு விழாவையொட்டி, லுஸ்னிகி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது.
மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டிருந்ததாக மாஸ்கோ பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

பிரபல பாடகர் ஒலெக் காஸ்மனோவ் பங்கேற்று பாடினார். இதில் கலந்து கொண்ட புதினை ‘‘உக்ரைனில் நாஜியிசத்தை எதிர்த்து புதின் போராடுகிறார்’’ என்று பலர் பாராட்டி பேசினர்.
மேலும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin),
ரஷ்ய இராணுவத்தை பெருமைப்படுத்தியுள்ளார். மேலும், தேவைப்படும்போது, தங்கள் உடல்களை கேடையமாக மாற்றி எதிரிகளின் தோட்டாக்களிலிருந்து சகோதரர்களைப் போல ஒருவரை ஒருவர் பாதுகாக்கிறார்கள்.
அத்தகைய ஒற்றுமை நீண்ட காலமாக நம்மிடம் இல்லை எனவும் இராணுவ வீரர்கள் தொடர்பில் புடின் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இனப்படுகொலையில் இருந்தும் மக்களை பாதுகாத்து வருகின்றனர் என்றார். விளாடிமிர் புடினின் இந்த உரை, நாடு முழுவதும் முக்கிய செய்தி ஊடகங்களில் நேரலை செய்யப்பட்டது.