அதி பயங்கரமான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் பிரபல நாடு! ரஷ்யாவிற்கு எச்சரிக்கை
ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் மட்டும் தனியாக போரிடவில்லை என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் அவருக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல் குறித்து விவாதிக்க நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 தலைவர்கள் பிரஸ்சல்ஸில் அவசர கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேட்டோ உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நடந்த செய்தி மாநாட்டில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ்,
பிரித்தானியா, உக்ரைனுக்கு கூடுதலாக 6,000 ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, டாங்குகளை எதிர்க்கக்கூடிய 4,000 ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 6,000 ஏவுகணைகளை அனுப்ப பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
அந்த ஏவுகணைகளில் Javelin ஏவுகணைகள், NLAW என்னும் அடுத்த தலைமுறை டாங்குகளை எதிர்க்கக்கூடிய ஆயுதங்கள் ஆகியவையும் அடங்கும்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய துருப்புகள் எதிர்க்க ஆயுதங்கள் குறைந்துகொண்டே வருவதாக அச்சம் எழுந்துள்ள நிலையில், போரிஸ் ஜோன்சனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.