ராணியாரின் பூதவுடலை பாதுகாத்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட பரபரப்பு!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 1952 முதல் பிரித்தானிய மகாராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரித்தானிய வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர்.
பிரித்தானிய ராணி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு உலகத் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, மறைந்த ராணியின் உடல் நேற்று பக்கிங்காம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வெஸ்ட்மிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணி முதல், இறுதிச்சடங்கு நடைபெறுகிற நிலையில், 19-ம் திகதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை பார்த்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக முழு நேர காவல் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு நின்று இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரம் தள்ளாடிய படியே நின்று கொண்டிருந்த அந்த காவலர் நிலைக்கொள்ளாது மயங்கி விழுந்தார்.
அருகில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சை அளிக்க அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.