பிரபல பிரித்தானிய பத்திரிக்கை ஒன்று இலங்கை தொடர்பில் விடுத்த கோரிக்கை!
குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரித்தானியாவின் பிரபல பத்திரிக்கை ஒன்று உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானிய பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தற்போது வழங்கப்படும் சொகுசு சுற்றுலா பொதியை பெற்றுக்கொள்வதற்காக மிக குறைந்த தொகையை ஒதுக்குவதற்கான சந்தர்ப்பம் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட காலத்திற்கு பின்னர் கிடைக்கும் சந்தர்ப்பமாகும்.
ஆர்ப்பாட்டம் மற்றும் உணவு பற்றாக்குறை முதலான அச்சத்தின் காரணமாக வருடத்தின் முதல் காலாண்டுப்பகுதியில் பிரித்தானியா தனது சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், பிரித்தானிய அரசாங்கம் தனது அறிவிப்பை விலக்கிக் கொண்டுள்ளது.
தனது சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு சுற்றுலா செல்வதை பிரித்தானியா தற்பொழுது ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குச் செல்வது வசதியானது என்றும் அந்த பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு செல்வதற்காக 36 மணித்தியாலம் என்ற குறுகிய காலப்பகுதி டிஜிட்டல் முறைக்கு அமைவாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.