லண்டன் பூங்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: தீவிர முயற்சியில் பொலிஸார்!
லண்டன் உள்ள பூங்கா ஒன்றில் தீப்பிடித்து எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானிய தலைநகர் லண்டன் - நோர்டோல்ட்டின் பெல்லூவ் பூங்காவில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை தீயணைப்புப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய தினம் (13-06-2022) அதிகாலை 4.30 மணிக்குப் பின்னர் தீயணைப்புப் பிரிவினரால் பொலிஸார் வரவழைக்கப்பட்டதாக படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தொடர்புடைய பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 999 இலக்கத்திற்கு அழைத்து தகவல் அளித்துள்ளனர்.
மேலும், கண்டெடுக்கப்பட்டது ஆணின் சடலம் என குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவரது அடையாளம் காணப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பெருநகர காவல் துறையினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.