இலங்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்த இரு இளைஞர்கள்!
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய பெல்மடுல்ல நோனாகம பகுதியில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேடொன்றில் மோதியதில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

17 வயதுடைய ஊருபொக்க பகுதியை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேலும், கொஸ்கம பகுதியில் உந்துருளியில் பயணித்த குறித்த இளைஞர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மிரிஸ்வத்த பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்..
விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன