இரு இளைஞர்கள் மாயம்; ரஷ்ய தம்பதிகள் மீட்பு
பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றதாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமற்போன இளைஞர்கள் 23 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மத்திய பானம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பானம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிக்கடுவ துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிர்காக்கும் படையினரால் மீட்கப்பட்ட ரஷ்ய தம்பதியினரில் ஆணுக்கு 47 வயது எனவும் பெண்ணுக்கு 46 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        