இரு வேறு இடங்களில் கைதான இளைஞர்கள் ; சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள்
விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணை
இதன்போது 100 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் தூல்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு யடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கெப்பெட்டிபொல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தம்பவின்ன பகுதியில் மேற்கொண்ட வீதிச் சோதனையின் போது, 130 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளர்.