காதல் காவியம் பாடும் இருவாச்சி பறவைகள்
பறவை இனங்களிலேயே அரிதான, அழகான பறவை என்றால் இடத்தில் இருப்பது ‘ஹோர்ன் பில்’ என்று சொல்லக்கூடிய இருவாச்சி பறவைக் கூட்டம் தான்.
இருவாச்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை ஹோர்ன்பில்” (Horn bill) என அழைக்கின்றன உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி இனங்கள் இருக்கின்றன.
இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. இவை பெரிதும் இந்தியாவின் நேபாளம் , அந்தமான் தீவுகள் மற்றும் இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள் அருணாசலப் பிரதேசம், ஆகிய இடங்களில் வாழ்கின்றன. இங்கு 9இனங்கள் உள்ளன.
தென்னிந்தியாவில் 4வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. இவை ஆண் இருவாச்சி பறவை முதலில் பெண் இருவாச்சிபறவைக்கு பழம், பூச்சிகள் போன்றவற்றை வழங்கும்.
பெண் இருவாச்சி அதில் ஈர்க்கப்பட்டால் மட்டுமே ஆண் பறவையைத் தனது இணையாகத் தேர்வு செய்யுமாம். பின்னர் தமது காதலை வெளிப்படுத்த இரண்டுமே உயரமாகப் பறந்து வரும் இடை தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறும் வரை எங்கு சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்து செல்லுமாம்.
காதலாகி கருவாகிற இனப்பெருக்க காலத்தில் இருபறவைகளும் அடர்வனத்தில் இருக்கிற மரக்கூடுகளை தேடி அலையும். இயற்கையாக இருக்கும் மரப்பொந்துகள்தான் இப்பறவைகளின் கூடு. இனப்பெருக்க காலங்களில் பெண் பறவைகள் முட்டையிடுவதற்கு முன் கூண்டிற்குள் சென்றுவிடும்.
பின்னர், பெண் பறவைக்கு உணவு அளிப்பதற்குச் சிறிய துவாரம் மட்டும் விட்டுவிட்டு, ஆண் பறவை மண்ணாலும் எச்சத்தாலும் கூட்டை அடைத்துவிடும். கூட்டில் இருக்கும் பெண் பறவை தனது இறகுகளை உதிர்த்து, மெத்தை போல் செய்து அடைகாக்கும்.
குஞ்சுகள் பறக்கும் நிலை வரும் வரை பெண் பறவை கூண்டிலேயே இருக்கும். பெண் பறவை சென்றவுடன், குஞ்சுகளை பராமரிக்கும் முழு பொறுப்பும் ஆண் பறவைதான் மேற்கொள்ளும்.
அவைகளுக்கு, பறக்கவும், இரை தேடவும் கற்றுக்கொடுப்பதும் ஆண் பறவையின் பணியாகும். இதில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தக்கூடிய விடயம் என்னவெனில்! அடைகாக்கும் காலத்தில், காதலி பறவைக்காக இரை தேடிச்செல்லும், காதலன் திரும்பவில்லை என்றால், காதலி உயிர்விடுவதை தவிர வேறு வழியில்லை.
இவ் விடயம் காதலின் உச்சபட்ச ஈடுபாட்டை வெளிபடுத்துகிறது