நீர்கொழும்பில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு
நீர்கொழும்பு பிரதேசத்தில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்திலும் நீதிமன்ற வீதியிலும் 65 வயது மற்றும் 75 வயதுடைய முதியவர்களின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 4 அடி 6 அங்குல உயரம் கொண்ட ஆண் ஒருவருடையது மற்றும் அவரது தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது.
அவர் கடைசியாக கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். நீர்கொழும்பு மேல் நீதிமன்ற வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சுமார் 4 அடி 5 அங்குல உயரம் கொண்ட ஆண் ஒருவருடையது மற்றும் அவரது தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது.
அவர் கடைசியாக வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்தார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.