மலேசியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தம்பதியினர் !
மலேசியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மலேசியா - கோலாலம்பூரில் இலங்கை தம்பதியினர் ஓட்டிச்சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதுடன் காரில் இருந்த அவர்களது மகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு 33 வயது எனவும் அவரது கணவருக்கு 35 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் மலேசியாவில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.