இரு பாடசாலை மாணவிகள் மாயம்
வெல்லவாய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகள் நேற்று (15) வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு
காணாமல் போன மாணவிகளில் ஒருவர் பாட வேலைக்காக கடந்த 14 ஆம் திகதி வெல்லவாய, கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு மாணவியொருவரின் வீட்டிற்குக் சென்றுள்ளார்.
வீட்டின் உரிமையாளர் மறுநாள் (15) வியாழக்கிழமை காலை எழுந்து பார்க்கும் போது மாணவிகள் இருவரும் வீட்டில் இல்லாததை அறிந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.