நெருக்கடிக்கு தீர்வு காண கிடைத்துள்ள இரண்டு முன்மொழிவு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்களால் இரண்டு தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (05-04-2022) பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண கட்சித் தலைவர்கள் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் ஊடாக நியமிக்க வேண்டும் அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதே இரண்டு முன்மொழிவுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்