இரு தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள் ; நவீன வரலாற்றில் நடக்காத பெரிய நிகழ்வுகள்
உலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள், மனிதர்களுடன் அன்னிய தொடர்பு, விளாடிமிர் புட்டின் மீதான கொலை முயற்சி, பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனங்களைச 2025 ஆம் ஆண்டுக்கு கணித்துள்ளனர்.
இவர்கள் 470 வருட இடைவெளியில் பிறந்திருந்தாலும், நவீன வரலாற்றில் இதுவரை நடக்காத சில பெரிய நிகழ்வுகளை இருவரும் கணித்துள்ளனர்.
பாபா வங்கா
பாபா வங்கா ஒரு பல்கேரிய தீர்க்கத்தரிசி ஆவார், அவர் 1996 இல் இறந்தார். அவர் பல்கேரியாவின் நோஸ்திரதாம் என்றும் அழைக்கப்படுகிறார். பாபா வாங்காவின் கணிப்புகள் 85 சதவிகிதம் துல்லியமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
2004 இல் இந்தோனேசியா சுனாமி, சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற சில வரலாற்றுத் தருணங்களை அவர் முன்னறிவித்தார்.
அது தவிர, 2022 இல் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று அவர் கணித்தார். அந்த ஆண்டு ஜூலைக்கு முன்பு அவுஸ்திரேலியா மூன்று முறை வெள்ளத்தில் மூழ்கியது.
வடக்கு அரைக்கோளத்தில், முக்கிய நகரங்கள் கடுமையான வறட்சியை சந்திக்கும் என்றார். இது இங்கிலாந்து, இத்தாலி மற்றும் போர்ச்சுகலில் காணப்பட்டது. இந்த நிலையில், பாபா வாங்காவின் கூற்றுப்படி 2025 ஆம் ஆண்டு மோசமானதாக இருக்கிறது.
மனிதகுலத்தின் வீழ்ச்சி 2025 இல் தொடங்கும் என்று அவர் கணித்துள்ளார். ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் வெடிக்கும் என்று அவர் கூறினார். போர் நமது மக்கள்தொகையில் கணிசமான பகுதியை அழிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், ரஷ்யா உயிர்வாழ்வது மட்டுமல்லாமல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் அவர் கணித்தார். எனினும், 2023 இல் உலகம் அழிந்துவிடும் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
அணு உயிரி ஆயுதங்களும் சூரிய புயலும் அதற்குக் காரணமாக அமைந்திருந்தது. 2025 இல் பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு என்னவென்றால், பூமி வேற்று கிரக உயிரினங்களை சந்திக்கும்.
டெலிபதி உண்மையாக மாறக்கூடும். அது தவிர, விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் மனித உறுப்பை வெற்றிகரமாக வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், 2028 ஆம் ஆண்டில் வெள்ளி கிரகம் மீதான விண்வெளி ஆய்வு தொடங்கும், அதனால் உலகம் ஒரு புதிய வாழ்விடத்தைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
இது தவிர பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள், அமெரிக்க மேற்கு கடற்கரையில் நிலநடுக்கங்கள் மற்றும் செயலற்ற எரிமலைகள் வெடிப்பது உட்பட தொடர்ச்சியான பேரழிவு இயற்கை பேரழிவுகளையும் முன்னறிவிக்கிறது
மைக்கேல் டி நோஸ்திரதாம்
450 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த போதிலும், நோஸ்ட்ராடாமஸ் தொடர்ந்து தீர்க்கதரிசனமான விடயங்களை கூறியுள்ளார். 1566 இல் அவர் இறப்பதற்கு முன், அவர் 94 கவிதை அறிக்கைகளின் தொகுப்பை எழுதினார் மற்றும் 1555 ஆம் ஆண்டு தனது புத்தகமான Les Prophéties ஐ வெளியிட்டார்.
அவர், தனது நண்பரும் முன்னாள் மன்னருமான இரண்டாம் ஹென்றி 40 வயதில் ‘இளம் சிங்கத்தின்’ கைகளில் இறந்துவிடுவார் என்று துல்லியமாக கணித்தார்.
அது மட்டுமல்லாமல், 1930 ஆம் ஆண்டு ஹிட்லரின் அதிகாரத்திற்கு எழுச்சி மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்படுவதையும் அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டு கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் வெடிக்க கூடும் என்றும், பிரித்தானியா மோதலால் அழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 2025 இல் அவர் கடந்த காலத்திலிருந்து ஒரு பெரிய கொள்ளைநோய் திரும்பும் என்றும் கணித்துள்ளார். ஸ்தாபிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு 2025 ஆம் ஆண்டு குறையும்’ என்றும், ‘புதிய உலக வல்லரசுகளின் எழுச்சியுடன்’ படைவீரர்கள் போர்க்களத்தால் ‘சோர்வடைந்து’ போவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.