விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு பொலிஸ் பொறுப்பதிகாரிகள்.
சட்டவிரோத மரக்கட்டைகளுடன் கைப்பற்றப்பட்ட லொரியை மாற்றிய சந்தேகத்தின் பேரில் கிரியுல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியஜனக அல்விஸ் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி சரித் மதுரங்க ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய மேலதிக நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட கைப்பற்றப்பட்ட லொரிக்கு பதிலாக மற்றொரு லொரியை நாரம்மல நீதவான் முன் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் ஆஜர்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
பிணை விண்ணப்பம்
இருப்பினும், சந்தேக நபர்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள், இரண்டு அதிகாரிகளும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கறைபடாத தொழில் பதிவுகளைக் கொண்டவர்கள் என்றும் குறிபிட்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும், பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான், சந்தேக நபர்களை ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.