பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலி
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (27) இரு என்ஜின்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தின் விமானியும், துணை விமானியும் உயிரிழந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அபிஷேக் பூஜாரி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து வெளியான காட்சிகள், புல் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் விமானம் முற்றிலும் சிதைந்து கிடப்பதைக் காட்டின. விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
விமானத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்தே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.