யாழில் ஏற்பட்ட விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூளாய் - மாவடி வீதியில், காளி கோயிலுக்கு சமீபமாக இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.