பிரித்தானியாவிற்கு செல்லும் போது நேர்ந்த சோகம்! கடைசியாக நண்பர்களுடன் பேசிய உருக வைக்கும் வார்த்தைகள்
சிறிய படகு ஒன்றின் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் பயணித்தகொண்டிருக்கும் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தால் புலம்பெயர்வோர் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம், (24) பிரித்தானியாவில் நல்ல ஒரு எதிர்காலம் காத்திருக்கும் என்ற நம்பிக்கையில், பிரான்ஸில் இருந்து சிறிய படகு ஒன்றில் 34 புலம்பெயர்வோர் பிரித்தானியாவை நோக்கி பயணித்துள்ளனர்.

இதேவேளை ஆங்கிலக்கால்வாயில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக அந்த படகு தண்ணீரில் மூழ்க, அதில் பயணித்தவர்கள் தண்ணிரில் மூழ்கியுள்ளனர். இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட நிலையில், 27 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதேவேளை Riaz Mohammed 12)Share Mohammed (17) ஆகிய இரு சகோதரர்களும் , கடலில் தாங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் படகு மூழ்கிவிடும் என்ற அச்சத்தில் அவர் நடுங்கிக்கொண்டிருந்த போது கரையில் இருந்த நண்பர்களோடு தொடர்பு கொண்டு, நாம் பிரித்தானியா செல்ல முடியாது போல உள்ளது.

கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. நாம் இறக்கப் போகிறோம் என்று எல்லாம் பேசி உள்ளார்கள். கரையில் இருந்த நண்பர்கள் அவர்களுக்கு தைரியம் சொல்லி உள்ளார்கள். ஆனால் சில நிமிடங்களில் அவர்களின் படகு கடலில் மூழ்கிவிட்டது.
இந்நிலையில், உயிரிழந்ததாக கருதப்படும் Riaz Mohammed 12)Share Mohammed (17), Palowan (16) மறும் Shinai (15) ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.