ஒரே வீட்டில் இருவர் பலி
வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி அக்குரணை துன்வில பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்துள்ள இருவரும் கண்டி அக்குரணை பகுதியை சேர்ந்த 18 மற்றும்19 வயதுடையவர்கள் என தெரிய வந்துள்ளது.
சம்பவம்
சம்பவத்தின் போது வீட்டில் இறந்தவர்களின் தாய், தந்தை மற்றும் மற்ற சகோதரர் என ஐவர் இருந்த நிலையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
அத்தோடு மண் மேட்டின் கீழ் விழுந்து படுகாயமடைந்த நிலையில் அவர்கள் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை நீடிக்கும் நிலையில், பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.