துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
மருதானையில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைதான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கொழும்பு மத்தியப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (06) பிற்பகல் கைது அவ் இருவரையும் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானை பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சுட்டுக் கொலை
கடந்த 30ஆம் திகதி வாழைத்தோட்டம் மாடிஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள கடையொன்றில் வைத்து ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் இந்த இருவர் கொடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (07) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.