வெளிநாட்டு பெண்ணிடம் இருவர் செய்த மோசமான செயல் ; தமிழர் பகுதியொன்றில் சம்பவம்
திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின்முன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அலஸ்தோட்ட பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தில், வெளிநாட்டுப் பெண்ணிடம் சில நபர்கள் தகாத முறையில் நடந்துக்கொள்ள முயன்றுள்ளனர்.
இது தொடர்பில் ஆணொருவர் கேட்கச் சென்றபோது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர் நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.