இலங்கையில் போலி மருத்துவர்கள் இருவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்து, களுத்துறை மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

விசேட நடவடிக்கை
பேருவளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் சிகிச்சை நிலையங்களை நடத்திச் சென்ற இவர்கள், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இலங்கை மருத்துவ பேரவையில் (SLMC) பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தமை இதன்போது தெரியவந்தது.