தமிழர் பகுதியில் இருவரை பலியெடுத்த சம்பவம் ; சொந்த வீட்டில் அரங்கேறிய துயரம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி பகுதியில் உள்ள வீட்டின் மேல் மாடியின் கூரைப்பகுதியில் திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இன்று (30) பிற்பகல் கருவப்பங்கேணி பகுதியில் உள்ள வீட்டின் முதலாம் மாடியில் உள்ள மேல் கூரையில் திருத்த வேலையில் வீட்டின் உரிமையாளரும், பணியாளர் ஒருவர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சவல் ஒன்றை பாவித்து மண் அள்ளிக்கொட்டிக்கொண்டிருக்கும்போது வீட்டியின் மேல் கூரை பகுதியினால் சென்ற உயர் மின்அழுத்த கம்பியில் சவல் பட்ட நிலையில் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதில் ஒருவர் மின்சாரம் தாக்கப்படும்போது அருகில் இருந்தவர் காப்பாற்றமுற்பட்ட நிலையில் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
ஸ்தலத்திற்கு வருகைதந்த மின்சார சபையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.