சென்னையிலும் இரு குழந்தைகளுக்கு HMPV; அச்சத்தில் மக்கள்!
சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் எச்.எம்.பி.வி எனும் வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் இரு குழந்தைகளும் சென்னையில் இரு குழந்தைகளும் எச்.எம்.பி.வி தொற்றினால் பாதிக்கபப்ட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனாவை போன்ற வைரஸ்
சீனாவில் தீவிரமடைந்துள்ள எச்.எம்.பி.வி எனும் வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, சென்னையிலும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை, கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலா 1 குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளிடமும் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளனர். இதில், எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் ஏற்கனவே 3 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் உறுதியான நிலையில், சென்னையில் 2 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சம்பவம்!
இதன்மூலம், இந்தியாவில் HMPV பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.