பாவனைக்கு உதவாத கழிவு தேயிலையுடன் சிக்கிய இருவர்
பாவனைக்கு உதவாத ஒருதொகை கழிவு தேயிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது 3,095 கிலோகிராம் பாவனைக்கு உதவாத ஒருதொகை கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கழிவு தேயிலையைக் கொண்டுசென்ற பாரவூர்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
முதற்கட்ட விசாரணை
இன்று மதியம் 12.30 அளவில் ஹட்டன், மல்லியப்பு சந்தியில் உள்ள வீதித் தடையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
எந்தவொரு அனுமதிப்பத்திரமும் இல்லாமல், தியஹேமதகமவிலிருந்து தலவாக்கலைக்கு, கழிவு தேயிலை கொண்டு செல்லப்பட்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஹட்டன் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குறித்த சந்தேக நபர்கள் நாளை (08) ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.